இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நீண்ட காலமாக பிரச்சினைகள் இருந்து வருகின்றன - கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நீண்ட காலமாக பிரச்சினைகள் இருந்து வருகின்றன - கெஹெலிய ரம்புக்வெல்ல

பல வருட காலமாக நிலவிவரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினையில் அரசியல் விடயமும் தொடர்புபட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கடந்த 26 ஆம் திகதி இந்திய பிரதமருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் பேசப்பட்ட விடயம் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைக் குறிப்பிட்டார்.

இந்த அத்துமீறலினால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இதனை சுமுகமாக தீர்ப்பதற்கு இரு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்க இந்த பேச்சுவார்த்தைக்காக பல வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்றிருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிரச்சினையை தீர்ப்பதற்காக இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் குழு அமைக்கப்பட்டிருந்தது. 

இந்த குழு இறுதியாக கடந்த ஜனவரி மாதம் சந்தித்தது. அதற்கு பின்னர் ஏற்பட்ட கொவிட் 19 தொற்று காரணமாக இந்த குழுவின் கூட்டம் நடைபெறவில்லை. இதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்திய மீனர்வர்களின் அத்துமீறல் குறித்த காணொளி காட்சிகளும் இந்திய பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி இதனை கவனத்தில் கொண்டுள்ளார். தமிழ் நாட்டுக்கு அப்பாலான இந்திய அரசாங்கத்திற்கு உட்பட்ட கரையோர பாதுகாப்பு பிரிவினர் மூலம் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள இந்திய பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காரையோர பாதுகாப்பு பிரிவினர் மூலம் இதனை தடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் என்றும் ஊடகத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment