மாளிகைக்காட்டுக்கு நிரந்தர கட்டிடத்தில் உப தபாலகம் : நடவடிக்கை எடுக்க கோருகிறார் தேசிய காங்கிரசின் அமைப்பாளர் ஹுதா - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

மாளிகைக்காட்டுக்கு நிரந்தர கட்டிடத்தில் உப தபாலகம் : நடவடிக்கை எடுக்க கோருகிறார் தேசிய காங்கிரசின் அமைப்பாளர் ஹுதா

காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் நிரந்தர கட்டிடமில்லாமல் வாடகை கட்டிடத்திலும் தற்காலிய கட்டிடங்களிலும் மிக நீண்ட காலமாக இயங்கி வரும் உப தபாலகத்திற்கான நிரந்தர கட்டிடம் ஒன்றை அவசரமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு கோரி உரிய அமைச்சான தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகவியலாளர்கள் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களுக்கு தேசிய காங்கிரசின் மாளிகைக்காடு அமைப்பாளரும் அல்-மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான யூ.எல்.என் ஹுதா உமர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தனது கோரிக்கையில் மாளிகைக்காடு பிரதேசத்தின் எல்லை பிரதேசங்களான சாய்ந்தமருது, காரைதீவு போன்ற பிரதேசத்தின் தமிழ், முஸ்லிம் மக்கள் பயன்படுத்தும் உப தபாலகமாக அந்த தபாலகம் அமைந்துள்ளது. 

இப்போது மாளிகைக்காடு பிரதேச மக்கள் வாசிகசாலையாக பயன்படுத்திய சனசமூக நிலையத்தை உப தபாலகத்திற்காக பயன்படுத்துவதனால் பத்திரிக்கை மற்றும் நூல்களை வங்கிக்கும் வாசகர்கள் நூலகமில்லாமல் கிலோ மீட்டர் கணக்கில் பத்திரிகைகளை வாசிக்க நிந்தவூர், கல்முனை, காரைதீவு அல்லது சம்மாந்துறைக்கு பயணிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது. 

ஆகவே எங்களின் நிலையை கவனத்தில் கொண்டு எங்களின் பிரதேசத்தில் உள்ள அரச காணியொன்றில் நிரந்தர உப தபாலக கட்டிடத்தை கட்டித்தர ஆவணம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment