புராதன காலத்து சிலையுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 22, 2020

புராதன காலத்து சிலையுடன் ஒருவர் கைது

ருத்ரா

வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ற.உ.சந்தனகுமார தெரிவித்தார்.

கல்குடா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தரவின் வழிகாட்டலில் எஸ்.ஜ.சம்பத் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களான வீரசிங்க, அசோக், சேனாதீர, கோபிநாத், பியங்கர ஆகியோர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.

கல்குடா பிரதேசத்தில் அன்மையில் ஆலயமொன்றில் சிலையொன்று இனம்தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டபோது இவ்வாறானதொரு அரிய வகை புராதான சிலையொன்றை கண்டு பிடித்துள்ளதாகவும் இது தொப்பிகல பிரதேசத்தில் சட்ட விரோத புதையல் அகழ்வு மூலம் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் சந்தேக தெரிவித்துள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad