அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒக்டோபர் மாதத்தில் வந்து விடும் என்று தெரிவித்தார்.

நவம்பர் 3ம் திகதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்துவிட வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பூசிக்கு ஒப்புதல்களை பெற பல ஆண்டுகளை எடுத்திருக்கும். ஆனால் அந்த ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை வெளியிட்டால் அது தனக்கு சாதமாக அமையும் என்று டிரம்ப் கருதுகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad