நாடாளுமன்ற சபைக்குள் உறுப்பினர்கள் அணியக்கூடிய ஆடை பற்றிய சம்பிரதாயம் உண்டு - அதாவுல்லாவின் ஆடை விவகாரம் தொடர்பில் மனோ! - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

நாடாளுமன்ற சபைக்குள் உறுப்பினர்கள் அணியக்கூடிய ஆடை பற்றிய சம்பிரதாயம் உண்டு - அதாவுல்லாவின் ஆடை விவகாரம் தொடர்பில் மனோ!

இலங்கை நாடாளுமன்ற சபைக்குள் உறுப்பினர்கள் அணியக்கூடிய ஆடை பற்றிய சம்பிரதாயம் உண்டு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய ஆடை விவகாரம் குறித்து நேற்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் அதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இலங்கை நாடாளுமன்ற சபைக்குள் உறுப்பினர்கள் அணியக்கூடிய ஆடை பற்றிய சம்பிரதாயம் உண்டு.

இதன்படி சம்பிரதாயமாக ஏற்றுக்கொள்ளப்படாத, ஆடையில் அதாவுல்லா எம்பி வந்ததால், சபை படைக்கல சேவிதரால் அவர் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

ஒருமுறை விஜயகலா எம்பி சல்வார் - கமிஸ் ஆடையில் சபைக்குள் வந்த போது வெளியேறுமாறு பணிக்கப்பட்டார். இதைவிட இன்னும் பல எம்பிக்களும் இப்படி வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இதுவரை சம்பிரதாயத்தில் உள்ளடக்கப்படாத ஆடையும் சம்பிரதாய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என எவராவது விரும்புவார்கள் எனில், அது பற்றி கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு பிரேரித்து கலந்துரையாடி முடிவெடுக்கலாம்.

இதுதான் இன்றைய (22) நிகழ்வு பற்றிய பின்னணி. இது பற்றி சில ஊடகங்கள் விளக்கமாக செய்தி வெளியிடாமை, கவலைக்குரியது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad