இரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் பாராளுமன்றம் வரலாம் - எச்சரிக்கிறார் ஞானசாரர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 19, 2020

இரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் பாராளுமன்றம் வரலாம் - எச்சரிக்கிறார் ஞானசாரர்

(இராஜதுரை ஹஷான்) 

விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டாலும் அவர்களின் பிரிவினைவாத கொள்கை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் இரட்டை குடியுரிமை விவகாரத்தை பிரிவினைவாத கொள்கைகயை செயற்படுத்த பயன்படுத்திக் கொள்வார்கள். ஆவவே இரட்டை குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். 

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்த ஞானசார தேரர், ஊடகங்களுகக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், புலம்பெயர் அமைப்பினரும் அதிகளவில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர். பிரபாகரனால் செய்ய முடியாததை பாராளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும்.

இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை காலமும் 20 சீர்திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. பிரதான இரு கட்சிகளும் ஆட்சியமைக்கும் போது தங்களுக்கு தேவையான விதத்தில் அரசியமைப்பினை திருத்தம் செய்து கொள்கிறார்கள். இதனால் அரசாங்கத்துக்கு நன்மை ஏற்பட்டுள்ளதே தவிர நாட்டுக்கு எவ்வித அபிவிருத்திகளும், மாற்றங்களும் ஏற்படவில்லை. 

அரசியமைப்பின் 17 ஆவது திருத்துக்கு ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் 18 ஆவது திருத்திற்கும், 19 ஆவது திருத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள். அரசியமைப்பின் 19 ஆவது திருத்தம் கடந்த காலங்களில் அரச மற்றும் சமூக மட்டத்தில் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது. 19ஆவது திருத்தத்தை ஆதிரித்த அரசியல்வாதிகள் அரசியல் தேவைகளுக்காக அதனை எதிர்க்கவும் ஆரம்பித்தார்கள். அது அரசியல்வாதிகளுக்கே உரித்தான தனித்துவ இயல்பு. 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். தற்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருத்தில் இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகள் நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டாலும் அவர்களின் பிரிவினைவாத கொள்கை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குப்பற்ற முடியும் என்பதை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிச்சயம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். 

சீனர்கள், இந்தியர்கள், ஆகியோர் எதிர்காலத்தில் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக செய்படுவார்கள் என்பதில் எவ்வித ஆச்சரியமும் கிடையாது. ஆகவே அரசாங்கம் இரட்டை குடியுரிமை விவகாரத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment