அரசாங்கம் ஜனநாயகத்தினை குழப்புவதற்கு முயல்கின்றது - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

அரசாங்கம் ஜனநாயகத்தினை குழப்புவதற்கு முயல்கின்றது - ரஞ்சித் மத்தும பண்டார

20வது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்தினை குழப்புவதற்கு முயல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் பெற்றோர்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை போல உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நீதியமைச்சர் பிரதமர் அமைச்சர்களுக்கு கூட தெரியாமல் அதனை உருவாக்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியையும் அரசாங்கத்தினையும் சர்வாதிகாரிகளாக மாற்றும் நோக்கத்துடனேயே 20வது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மக்களின் இறைமை நாடாளுமன்றத்தின் ஊடாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது தற்போது மக்களின் இறைமை அழிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளை கருத்தில் கொள்ளாமல் முடியாட்சியை ஏற்படுத்த 20வது திருத்தம் முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment