மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து இவ்வாரம் முக்கிய அறிவிப்புகள் வரலாம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 6, 2020

மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து இவ்வாரம் முக்கிய அறிவிப்புகள் வரலாம்

Tamilmirror Online || மிலேனியம் சவால் ஒப்பந்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மிலேனியம் சவால் (எம்.சி.சி.) ஒப்பந்தத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக அதன் பணிப்பாளர் சபை அடுத்த வாரம் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் கூடவுள்ளது. 

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட சில அபிவிருத்திகளுக்காக 480 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்காக அமெரிக்காவினால் இந்த ஒப்பந்தம் தொடர்பான யோசனை இலங்கையில் முன்வைக்கப்பட்டது. 

எனினும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில் நாட்டில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டமையால் இதுவரையில் அந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தோடு இது தொடர்பில் ஆராய்வதற்காக விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

எம்.சி.சி. ஒப்பந்தத்தில் காணப்படும் உள்ளடக்கங்கள் முற்றாக அரசியலமைப்பிற்கு முரணானது என்று அந்த குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன் காரணமாக அடுத்த வாரமளவில் எம்.சி.சி. தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை வெளிநாட்டுறவுகள் அமைச்சின் செயலாளர் அத்மிரால் கலாநிதி ஜயநாத் கொலம்பகே, இந்த ஒப்பந்தம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எம்.சி.சி. ஒப்பந்தம் ஒருபோதும் கையெழுத்திடப்படமாட்டாது என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. 

அத்தோடு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, எம்.சி.சி. ஒப்பந்தத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனி அதிகாரத்தால் நீக்க முடியாது என்றும் அதற்காக பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment