நான் சிறை செல்வதற்கு காரணம் மஹிந்தவே, அரசாங்கம் தவறான பாதையில் பயணிக்கிறது - சரத் பொன்சேகா - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

நான் சிறை செல்வதற்கு காரணம் மஹிந்தவே, அரசாங்கம் தவறான பாதையில் பயணிக்கிறது - சரத் பொன்சேகா

இறுதிப்போரை நானே வெற்றிகரமாக முடித்தேன் – சரத் பொன்சேகா! – Eelam News
(இராஜதுரை ஹஷான்) 

சிறை கைதிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற கொள்கை பெயரவில் மாத்திரமே செயற்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையை பலத்தை தக்கவைக்க மரண தண்டனை கைதிக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் ஜனநாயகத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், மரண தண்டனை கைதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரணமானம் செய்து கொண்டமை அரசாங்கம் இனிவரும் காலங்களில் எவ்வாறு செயற்படும் என்பதை நாட்டு மக்கள் முனகூட்டியே அறிந்துகொள்ள முடிந்துள்ளது. இனிவரும் காலங்களில் சிறைக் கைதிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலைப்பாடு தற்போது தோற்றம் பெற்றுள்ளது. 

2010 ஆம் ஆண்டு நான் சிறை செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்தார். இராணுவ நீதிமன்றம் இராணுவத்தில் சேவையாற்றிய உயர் அதிகாரிகளை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. இராணுவ நீதிமன்றம் முறையான சட்டங்களை பின்பற்றவில்லை. அதனால் இராணுவ நீதிமன்றம் அநீதி இழைத்துள்ளது என்றே குறிப்பிடுவேன். 

ஒரு நாடு - ஒரு சட்டம் என்று அரசாங்கம் குறிப்பிட்டுக் கொள்வது போலித்தனமானது என்பது மரண தண்டனை கைதி பிரேமலால் விவகாரத்தில் வெளிப்பட்டு விட்டது. இதனை நாட்டு மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்பதே எமது கேள்வியாகும். தவறான எடுத்துக்காட்டை நோக்கியே அரசாங்கம் பயணிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad