யுபுன் அபேகோன் தெற்காசியாவின் வேகமான வீரராக பதிவானார் - நாமல் ராஜபக்‌ஷ பாராட்டு தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

யுபுன் அபேகோன் தெற்காசியாவின் வேகமான வீரராக பதிவானார் - நாமல் ராஜபக்‌ஷ பாராட்டு தெரிவிப்பு

யுபுன் அபேகோன் தெற்காசியாவின் வேகமான வீரரானார்-Yupun Abeykoon Breaks Sri Lanka and South Asia 100 Record
இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஜேர்மனியில் நேற்று (09) இடம்பெற்ற சர்வதேச டெஸ்ஸவ் (Dessau) மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 10.16 செக்கன்களில் ஓடி முடித்து சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியில் முதலிடம் பிடித்த அவர், இலங்கையின் தேசிய சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னர், ஹிமாஷா எஷான் 10.22 செக்கன்களில் தேசிய சாதனையை படைத்திருந்தார்.

இது தொடர்பில் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தனது ட்விற்றர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளதோடு, பெருமைப்படும் தருணம் இதுவென்றும், சிறந்த சாதனையெனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad