பால்மா ஏற்றிச் சென்ற லொறி விபத்து - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

பால்மா ஏற்றிச் சென்ற லொறி விபத்து

பால்மா ஏற்றிச் சென்ற லொறி விபத்து; போக்குவரத்து பாதிப்பு-Milk Powder Container Lorry Accident-Traffic
பால்மா ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் நாவலபிட்டி ஹப்புகஸ்தலாவ - கொத்மலை வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகலிலிருந்து ஹப்புகஸ்தென்னக்கு பால்மா ஏற்றி வந்த குறித்த கொள்கலன் தாங்கிய கனரக வாகனமே ஹப்புகஸ்தலாவ சந்தியில் இன்று (09) பிற்பகல் 2.00 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

கனரக வாகனத்தின் முன் சில்லு வீதியை விட்டு விலகி மண்ணில் புதையுண்டுள்ளது.

குறித்த கனரக வாகனத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுவருவதுடன் போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)

No comments:

Post a Comment

Post Bottom Ad