காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு தடையுத்தரவு - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு தடையுத்தரவு

பாறுக் ஷிஹான்

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலுக்கு திலீபனின் நினைவேந்தல் தினக்கூட்டம், ஊர்வலத்தை நடத்த நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுள் ஒருவரான திலீபனின் நினைவு தினத்தை நினைவுகூர தவிசாளர் ஜெயசிறில் நடவடிக்கை எடுத்து வருவதாக முறையிட்டிருப்பதால் அதனைத் தடுத்து நிறுத்த தடையுத்தரவு விதிக்குமாறு கோரி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றுக்கு சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டீ.எஸ்.ஜயலத் விண்ணப்பித்திருந்தார்.

இவ்வாறான கூட்டம், ஊர்வலம் போன்றவற்றால் பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் தடங்கல்கள், சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே, அவற்றைத்தடை செய்ய உத்தவு வழங்குமாறும் கேட்டிருந்தார்.

அதனையேற்ற சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின்படி, மேற்படி நினைவேந்தல் கூட்டம், ஊர்வலம் என்பவற்றை நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad