ஆனைவிழுந்தாவ சரணாலய காடழிப்பு : கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு! - News View

Breaking

Post Top Ad

Sunday, September 6, 2020

ஆனைவிழுந்தாவ சரணாலய காடழிப்பு : கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

T&T's deforestation at 'crisis levels', says planning consultant | Loop News
ஆனைவிழுந்தாவ சரணாலயத்திற்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமான முறையில் காடழிப்பு செய்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார். 

சிலாபம் ஆனைவிழுந்தாவ சரணாலயத்திற்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமான முறையில் காடழிப்பு மேற்கொண்டமை தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளரினால் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த மாதம் 25ஆம் திகதி இரவு குறித்த பகுதியில் இறால் பண்ணை ஒன்றை அமைப்பதற்கு சட்டவிரோதமான முறையில் கடழிப்பை மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெக்கோ இயந்திரத்தின் சாரதி உட்பட இருவரே இவ்வாறு மீண்டும் இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad