அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் இந்தியாவில் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் இந்தியாவில் காலமானார்

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான டீன் ஜோன்ஸ் (Dean Jones) இந்தியாவில் காலமானார்.

IPL கிரிக்கெட் வர்ணனைக்காக இந்தியாவிற்கு சென்றிருந்த டீன் ஜோன்ஸ், தனது 59 ஆவது வயதில் மும்பை நகரில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கிரிக்கெட்டிற்காக தன்னை அர்ப்பணித்த டீன் ஜோன்ஸ், சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயற்பட்டு வந்தார்.

1984 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் டெஸ்ட் அந்தஸ்தை தனதாக்கிக் கொண்ட டீன் ஜோன்ஸ், 52 டெஸ்ட் போட்டிகளிலும், 164 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார்.

1992 ஆம் ஆண்டு இலங்கையுடன் மொரட்டுவை டி சொய்சா விளையாட்டரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியே டீ ஜோன்ஸின் இறுதி டெஸ்ட் தொடராக அமைந்தது.

அவர் டெஸ்ட் போட்டிகளில் 3,631 ஓட்டங்களையும் ஒருநாள் போட்டிகளில் 6,068 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

1987 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு டீன் ஜோன்ஸ் அதிகப் பங்காற்றினார்.

No comments:

Post a Comment