அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஏன் ? சிறப்புக் கட்டுரை | வினவு
2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் வெள்ளை மாளிகை அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் சுமூகமான உறவை வைத்துக் கொள்வது, இதற்கு மாறாக வெஸ்ட் பேங்குடனான உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் தீர்மானம் டிரம்ப் கொண்டு வந்து இருந்தார்.

இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வரும் செப்டம்பர் 15ஆம் திகதி உறவை இயல்பாக்கும் வகையில் மத்திய கிழக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோர்வே நாடாளுமன்றம் நோபல் பரிசு குழுவிடம் பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad