ஜனாதிபதியை அக்கறை செலுத்த கோரும் மனோ - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

ஜனாதிபதியை அக்கறை செலுத்த கோரும் மனோ

நட்டமடையும் பெருந்தோட்டங்களை பகிர்ந்தளிக்கும் விடயத்தில், தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

பெருந்தோட்டங்கள் நட்டமடைவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அதனை எதிர்கொள்ளவே, நஷ்டமடையும் பெருந்தோட்டங்களை சிறு தோட்ட உடைமைகளாக பிரித்து வழங்க வேண்டுமென தாங்கள் கூறியதாக முகநூல் பதிவு ஒன்றில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அந்த முயற்சிகளையும் தாங்கள் ஆரம்பித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நிலையில், நட்டமடையும் தோட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை காட்டுவது நல்லது என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றை சிறு தோட்டங்களாக பயிர் செய்கைக்காகவும், இரத்தினக்கல் அகழ்வுக்காகவும், காணிகள் பிரித்து வழங்கப்பட ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை நல்லதாகும்.

ஆனால் காணிகள் பிரித்து, வழங்கப்படும் போது, தோட்டத் தொழில் துறையில் பெரும் தொழில் நேர்த்தி அனுபவம் கொண்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.

இதனைக் கவனத்தில் கொள்வது, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களின் கடப்பாடு என தான் நினைவுபடுத்துவதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad