டிரம்புக்கு வந்த விசம் தடவிய பார்சல் தொடர்பில் பெண் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

டிரம்புக்கு வந்த விசம் தடவிய பார்சல் தொடர்பில் பெண் ஒருவர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பார்சலில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா - கனடா எல்லையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் அனைத்து தபால்களும் ‘ஆப்சைட் ஸ்கிரீனிங்’ முறையில் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டு ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி டிரம்புக்கு வந்த ஒரு பார்சல் வழக்கம்போல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த பார்சல் வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பே அதிகாரிகள் அதனைத் தடுத்து சோதித்தனர்.

அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால், பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்.பி.ஐ.) சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

அதில் ஜனாதிபதி டிரம்புக்கு அனுப்பப்பட்ட பார்சலில், ‘ரிச்சின்’ என்ற ஆபத்தான கொடிய விஷ பவுடர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டிரம்ப் பெயரிட்ட பார்சல் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது? என்பது குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகைக்கு ரைசின் விஷப்பொருள் அடங்கிய பார்சலை அனுப்பியதாக பெண் ஒருவரை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்கா - கனடா எல்லையில் கைதான அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசம் வெளிப்பட்டால் 36 தொடக்கம் 72 மணி நேரத்தில் மரணம் ஏற்படக்கூடும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad