ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான மடிக் கணனியை திருடி மூவாயிரம் ரூபாவுக்கு அடகு வைத்தவர் கைது! - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான மடிக் கணனியை திருடி மூவாயிரம் ரூபாவுக்கு அடகு வைத்தவர் கைது!

கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், மடிக்கணினி திருட்டு||Break  the shop lock Cell phones, laptops Theft -DailyThanthi
மலேசியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக் கணனியை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேநபர் கொள்ளையிட்ட மடிக் கணனியை மூவாயிரம் ரூபாவுக்கு அடகு வைத்து அந்த பணத்தில் ஹெரோயின் கொள்வனவு செய்த போது திங்கட்கிழமை கிருலப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 8 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்து ஒரு மாதத்திற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது. 

சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட மடிக் கணனி பொரல்லை பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 49 வயதுடைய பொரல்லை - சகஸ்புர பகுதியைச் சேர்ந்தவராவார். மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad