பாவனைக்குதவாத 99 கிலோ கிராம் பேரீச்சம்பழங்கள் மீட்டு அழித்தொழிக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Saturday, September 12, 2020

பாவனைக்குதவாத 99 கிலோ கிராம் பேரீச்சம்பழங்கள் மீட்டு அழித்தொழிக்கப்பட்டது

பாவனைக்குதவாத 99 கிலோ பேரீச்சம்பழங்கள் மீட்டு அழிப்பு-Expired 99kg Dates Destroyed by PHI-Thoppur-Mutur
பாவனைக்குதவாத 99 கிலோ கிராம் பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை (11) அழித்தொழிக்கப்பட்டுள்ளதாக தோப்பூர் சுகாதார பரிசோதகர் எம்.எம். சஜாட் தெரிவித்தார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட தோப்பூர் வாராந்த சந்தையில், விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில், வியாபாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பேரீச்சம்பழங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

தோப்பூர் வாராந்த சந்தையை பொதுச் சுகாதார பரிசோதகர்கள கடந்த 25 ஆம் திகதி சோதனைக்குட்படுத்தியபோது குறித்த வியாபாரியிடமிருந்து பாவனைக்கு உதவாத, காலாவதியானதும், முரணான சுட்டுத் துண்டு இடப்பட்டதுமான குறித்த பேரீத்தம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை அப் பேரித்தம்பழங்களை விற்பனை செய்யவிருந்த வியாபாரி கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் குறிப்பிட்டார்.

(தோப்பூர் குறூப் நிருபர் - எம்.எம். நௌபீக்)

No comments:

Post a Comment

Post Bottom Ad