உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் - சீரம் நிறுவன தலைமை அதிகாரி - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் - சீரம் நிறுவன தலைமை அதிகாரி

உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, உலகில் உள்ள அனைவருக்கும் 2024-ம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி போடுவதற்கு போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காது என்று எச்சரித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா கூறியதாவது மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இல்லை.

கொரோனாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தேவைப்படும்.

35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இது உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

கொரோனா பாதிப்பு தடுப்பூசி உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பூசிக்காக உலகம் நம்பிக்கையுடன் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போது தடுப்பூசி இறுதிக்கு அருகில் யாரும் வருவதை நான் கேள்விப்பட்டதில்லை.

மேற்கு இந்திய நகரமான புனேவை மையமாகக் கொண்டு செயல்படும் சீரம் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளது. அதில் பாதி இந்தியாவுக்கு அளிக்க உறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad