மேலும் 28 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய லுப்தான்சா ஏர்லைன்ஸ் திட்டம் - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

மேலும் 28 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய லுப்தான்சா ஏர்லைன்ஸ் திட்டம்

கொரோனா காரணமாக போதிய வருமானம் இல்லாததால் ஏற்கனவே 22 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் மேலும் 28 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெருமாலான விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.

ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. இதனால் விமான ஊழியர்களின் வேலை உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், நிலைமையை சீரடையாததால் பல நிறுவனங்களும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளன. இந்நிலையில், அந்த நடவடிக்கையில் தற்போது ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இறங்கியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 38 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பெருமளவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வருமானம் எதுவும் வரவில்லை. ஆனால் நிலைமையை சமாளிக்க ஜெர்மனி அரசிடம் இருந்து 9 மில்லியன் யூரோக்களை லுப்தான்சா பிணைத் தொகையாக பெற்றிருந்தது. 

ஆனால், அந்த தொகை கடந்த சில மாதங்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளம், கடனாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை, பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்பட்டது.

மேலும், நிதிச்சுமை காரணமாக கடந்த ஜூன் மாதமே 22 ஆயிரம் ஊழியர்களை லுப்தான்சா நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்தது. ஆனால், தொடர்ந்து உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து தொடங்கப்படாமல் இருப்பதால் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், நிலைமையை சமாளிக்க தனது ஊழியர்களில் மேலும், 28 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட உள்ளது. 

இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் பட்சத்தில் லுப்தான்சா நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்கும்.

லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் அந்நிறுவன ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad