எதையும் எதிர்பார்க்கவில்லை, 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவோம் - ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

எதையும் எதிர்பார்க்கவில்லை, 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவோம் - ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி

(இராஜதுரை ஹஷான்) 

அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளையோ, பிற பதவிகளையோ ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்பார்க்கவில்லை. அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவோம் என சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியமைமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு சுதந்திர கட்சி ஆதரவு வழங்குமா அல்லது எதிர்ப்பை வெளிப்படுததுமா என எதிர்தரப்பினர் எதிர்பார்த்துள்ளார்கள். 

அரசியமைப்பின் 19 ஆவது திருத்தம் சிறந்த பல இலக்குகளை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 19 ஆவது திருத்தம் நடைமுறையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய முத்தரப்பினருக்குமிடையில் அதிகாரம் தொடர்பான நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

அரச தரப்பினருக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் போது அவை முழு அரசாங்கத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறான நிலை தோற்றம் பெறf;கூடாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது. 

திருத்தத்தில் காணப்படும் ஒரு சில குறைபாடுகள் பாராளுமன்ற குழு ஊடாக திருத்தம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment