20 வது திருத்தம் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அலையை உருவாக்கும் : சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

20 வது திருத்தம் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அலையை உருவாக்கும் : சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன

ஜனநாயகத்திற்கு முரணான பல்வேறு அம்சங்களைக் கொண்ட அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் விளைவாக கடந்த 2010 - 2015 வரையான காலப்பதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பு அலையைப் போன்ற நிலைவரம் எதிர்காலத்திலும் ஏற்படக்கூடும் என்று சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன தெரிவித்தார். 

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள மன்றக் கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு 20 வது திருத்தத்தின் பாரதூரத்தன்மை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் ஊடாகப் பெற்றுக் கொண்ட ஜனநாயக வெற்றிகளை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்புவதற்கான நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான 19 வது திருத்தமும் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது. தற்போது அதனை மாற்றியமைப்பதற்கான 20 வது திருத்தமும் மக்கள் ஆணையின் ஊடாகவே கொண்டுவரப்படுகின்றது. 

2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பாராளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைந்தபோது அதனைக் கலைத்துவிட்டு தனது கொள்கைகளை செயற்படுத்தக் கூடிய ஒரு பாராளுமன்றத்தை பெற்றுத்தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி பொதுத் தேர்தலில் அவரது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டது. 

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான ஆட்சிமாற்றமொன்றுக்கு வாக்களித்தவர்களில் பலர் இம்முறை புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் நாட்டில் புதியதொரு மாற்றத்தை எதிர்பார்த்திருக்கக்கூடும். 

எனினும் அதனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி என்ற தனிநபரொருவரிடத்தில் அதிகளவான அதிகாரங்களை வழங்குவதன் விளைவாக அந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களே அவமதிக்கப்படுகிறார்கள். 

20 வது திருத்தத்தின்படி ஜனாதிபதி தவறிழைக்கும் பட்சத்திலும் கூட அவருக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாத நிலையேற்படுகின்றது. மேலும் அரசியலமைப்புப் பேரவை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக பாராளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதனூடாக மேற்கொள்ளப்படும் நியமனங்களில் உச்சபட்ச சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

வீரகேசரி

No comments:

Post a Comment