அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பின் தலைவனை கைது செய்துவிட்டோம் - சொல்கிறது ஈரான் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 2, 2020

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பின் தலைவனை கைது செய்துவிட்டோம் - சொல்கிறது ஈரான்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பின் தலைவனை கைது செய்துவிட்டோம் -  சொல்கிறது ஈரான்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஈரானில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பின் தலைவனை கைது செய்துவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு அமெரிக்காவும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. அனு ஆயுதம், பொருளாதாரத்தடை என பல விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல்களின் போது அமெரிக்காவுக்கு உதவியதாக பலரை ஜனாதிபதி ஹசன் ரவுகானி தலைமையிலான ஈரான் அரசு கைது செய்தும், தூக்குத் தண்டனை நிறைவேற்றியும் வருகிறது.

இதற்கிடையில், ஈரானில் 1979 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இஸ்லாமிய ஆட்சி முறைய முடிவுக்கு கொண்டுவர ஈரான் ராஜ்ய சபை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செல்பட்டுவரும் இந்த அமைப்பின் தலைவராக ஜம்ஷீத் ஷர்மத் என்பவர் செயல்பட்டு வந்தார். 

தொடக்கத்தில் ஈரானில் செயல்பட்டுவந்த இந்த அமைப்புக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது. இந்த அமைப்பை ஈரான் அரசு பயங்கரவாத குழுவாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஈரானின் ஷையர் நகரில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அமெரிக்காவில் செயல்பட்டுவந்த ஈரான் ராஜ்ய சபை பயங்கரவாத அமைப்புதான் நடத்தியதாகவும், ஜம்ஷீத் ஷர்மத் தான் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியது. ஆனால், ஜம்ஷீத் தலைமறைவாக வாழ்ந்துவந்ததால் அவரை கைது செய்ய முடியாமல் இருந்தது.

இந்நிலையில், ஷையர் நகர் குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய ஜம்ஷீத் ஷர்மத்தை கைது செய்துவிட்டதாக ஈரான் அரசு நேற்று தெரிவித்துள்ளது. ஜம்ஷீத் எங்கு மறைந்திருந்தார், அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்ற தகவல்களை ஈரான அரசு தர மறுத்துவிட்டது.

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஜம்ஷீத் ஷர்மத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad