போலியோ நோயில் இருந்து ஆபிரிக்க கண்டம் விடுதலை - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 26, 2020

போலியோ நோயில் இருந்து ஆபிரிக்க கண்டம் விடுதலை - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உலகில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ...
ஆபிரிக்கக் கண்டம் போலியோ நோயில் இருந்து விடுதலை பெற்ற பிராந்தியமாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்தது. கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வடகிழக்கு நைஜீரியாவில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

“வாழ்நாள் முழுவதும் பக்கவாதத்தை ஏற்படுத்துவதில் இருந்து 1.8 மில்லியன் குழந்தைகளை பாதுகாத்ததற்கு அரசுகள், நன்கொடையாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் சமூகங்களின் இடைவிடாத முயற்சிக்கு நன்றிகள்” என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

போலியோ அல்லது இளம்பிள்ளை வாத தொற்று நோய் குழந்தைகளின் முதுகெலும்பைத் தாக்குவதோடு குணப்படுத்த முடியாத பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

1950களில் இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது தொடக்கம் உலகெங்கும் இந்த நோய் ஒழிக்கப்பட்டு வருவதோடு, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் வரிய நாடுகளில் மாத்திரமே எஞ்சி இருந்தது. எனினும் இந்த ஆண்டில் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானில் மாத்திரம் மொத்த 87 போலியோ நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சமய ரீதியாக அந்த நாடுகளில் தடுப்புச் சொட்டு மருந்தைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில் எதிர்ப்பு நிலவுகிறது. அந்தச் சொட்டுமருந்து, சிறுமிகளைக் கருத்தரிக்க விடாமல் செய்யும் மேல்நாட்டுச் சதி என்று சமய கடும்போக்காளர்கள் சிலர் தவறாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சமயத் தலைவர்களும், இனக்குழுத் தலைவர்களும் இணைந்து அந்தத் தவறான பிரசாரத்தை முறியடிக்கப் போராடி வருகின்றனர்.

No comments:

Post a Comment