குருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பிடியாணைக்கு தடை உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Monday, August 24, 2020

குருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பிடியாணைக்கு தடை உத்தரவு

குருணாகல் அரச சபை கட்டடம் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண உட்பட 05 பேரை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் நீதிபதி சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட குழுவினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மனுவின் விசாரணை நிறைவடையும் வரை இந்த இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என, நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வுத்தரவு மூலம் இச்சம்பவம் தொடர்பான விசாரணை செய்யும் பொலிஸாருக்கோ அல்லது, நீதிபதியின் விசாரணைக்கோ எந்தவித தடையும் இல்லை என, நீதிபதிகள் குழாம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad