மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றதை முன்னிட்டு அக்கரைப்பற்று நகரில் மகிழ்ச்சி வெற்றி கொண்டாட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 9, 2020

மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றதை முன்னிட்டு அக்கரைப்பற்று நகரில் மகிழ்ச்சி வெற்றி கொண்டாட்டம்

Image may contain: 10 people, people standing and outdoor
(எம்.என்.எம்.அப்ராஸ்)

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி பிரமாணம் செய்ததையடுத்து அக்கரைப்பற்று நகரில் மகிழ்ச்சி கொண்டாட்டம் இன்று (09) இடம்பெற்றது. 

அம்பாறை மாவட்ட அனைத்து கட்சிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எம். நிஸாம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஆதரவாளர்களால் பானங்கள் பேரீத்தம் பழங்கள் என்பன வீதியினால் பயணித்த பயணிகள், பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர்கள், திகாமட்டுல்ல மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ அவர்களின் பிரதிநிதியாக டினுசன் மற்றும் ஆலோசகரான அமினுதீன், பொதுமக்கள் இவ் மகிழ்ச்சி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் . 

அத்துடன் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றதை முன்னிட்டு அம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வீதிகளில் பால்சோறு, பானம் என்பன ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
Image may contain: 7 people, outdoor, text that says "நல் வாழ்த்துக்கள் கௌரவ ரதம மந்திரி அவர்களின் பதவியே பற்பை முன்னிட்டு அம்பாரை மாவட்ட அனைத்து கட்சிகளின் செயற்ப்பாட்ட ளர் ஒன்றியம்"
Image may contain: 3 people, people standing and outdoor

No comments:

Post a Comment