நான்காவது தடவையாக பிரதமராகி சரித்திரம் படைத்திருக்கும் அரசாங்கத் தலைமைக்கு வாழ்த்துக்கள் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 9, 2020

நான்காவது தடவையாக பிரதமராகி சரித்திரம் படைத்திருக்கும் அரசாங்கத் தலைமைக்கு வாழ்த்துக்கள் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

நீதிமன்றை நாடுவதை வரவேற்கின்றார் ...
ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் பிரதமராக இன்று சத்தியப் பிரமாணம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷ் அவர்களுக்கு பொறுப்புள்ள முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதி என்கின்ற வகையில் தான் பாராட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பதவியேற்பு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழத்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பொறுப்புமிக்க இலங்கைக் குடிமக்களாகிய இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கை அனுசரித்து ஒழுகுவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு தங்களது அரசாங்கத்தின் அக்கறை உள்ள குடி மக்களாகவும் திகழ்வார்கள்.

கூடவே இந்த நாட்டின் சுபீட்சம், அமைதி அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி என்பனவற்றிலும் சரித்திர காலம் தொடக்கம் இன்றுவரை பல அர்ப்பணிப்புக்களைச் செய்தது போல எதிர்வரும் காலங்களிலும் முழுமூச்சான பங்களிப்புக்களோடும் அர்ப்பணிப்புக்களோடும் இலங்கை முஸ்லிம் சமுதாயம் செயலாற்றும்.

இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் நான்கு தடவைகள் பிரதமராகவும் இலங்கை அரசியலில் தடம்பதித்துள்ள தங்கள் ஆட்சியில் இலங்கை மக்களாகிய முஸ்லிம்களும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து சுபீட்சமாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதோடு அமைதியாக வாழவும் வழியேற்படும் என்று திடமாக நம்புகிறேன்” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment