அரச காணிகளை பராமரித்தவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத் திட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 25, 2020

அரச காணிகளை பராமரித்தவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத் திட்டம்

காணி இல்லாதோருக்கு காணி வழங்கும் வேலைத் திட்டம்
எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஜனாதிபதியின் காணி இல்லாதோருக்கு காணி வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக அரச காணிகளை பராமரித்து வந்த மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக அரச காணிகளை பராமரித்து வந்த மக்களுக்கு முதல் கட்டமாக காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக கணக்காளர் ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் ஹமீட், செயலக காணிக் கிளை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

காணி இல்லாதோருக்கு காணி அனுமதிப்பத்திரம் நாடளாவிய ரீதியில் வழங்கும் திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதல் கட்டமாக நூறு பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளை பராமரித்து வந்த ஏனைய மக்களுக்கும் அனுமதிப் பத்திரத்தினை பெற்றுக் கொடுப்கதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த காணிகளை தங்களின் தேவைக்கு மாத்திரம் பயன்படுத்த முடியும், அதனை பயன்படுத்த முடியாத பட்சத்தில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடியுமே தவிர காணியை இன்னொருவருக்கு கைமாற்ற முடியாது என ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் மேலும் தெரிவித்தார்.
Image may contain: 6 people, people standing and indoor
Image may contain: 10 people, crowd

No comments:

Post a Comment