கெப் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் பலி - News View

Breaking

Post Top Ad

Tuesday, August 25, 2020

கெப் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கெப் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் பலி-Accident-2-Youth-Killed-Wellawaya-Thanamalvila-Road-Kithulkote-Neluwayaya
வெல்லவாய - தணமல்வில வீதியில், நெலுவயாய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு (24) வெல்லவய - தணமல்வில வீதியில், கித்துல்கோட்டே, நெலுவயாய சந்திக்கு அருகே இடம்பெற்ற குறித்த விபத்திலேயே குறித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இரு இளைஞர்களும் எதிரே வந்த கெப் வாகனமொன்றுடன் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த செவணகல, கலுதியகமவைச் சேர்ந்த 19 வயதான, ஜி.ஜி. இந்திக சாமல் சத்துரங்க மற்றும் மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து வந்த 17 வயதான கசுன் ஶ்ரீமால் மூணசிங்க ஆகியோரே இதில் மரணமடைந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை காரணமாக, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை இன்றையதினம் (25) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தணமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad