காத்தான்குடியில் பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம் - சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் - News View

About Us

About Us

Breaking

Friday, August 14, 2020

காத்தான்குடியில் பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம் - சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன்

காத்தான்குடியில் 46 பேருக்கு டெங்கு ...
எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சுகாதார அலுவலகத்தினால் கொவிட் 19 கொரோனா நோய் தொடர்பான பி.சி.ஆர்.பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் மாதிரிகள் பெறும் நடவடிக்கை 14.08.2020 வெள்ளிக்கிழமை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

முதல் கட்டமாக காத்தான்குடி சுகாதார அலுவலகப்பிரிவில் சிகை அலங்காரம் மேற்கொள்பவர்களுக்கு இந்த பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 20 பேரின் மாதிரிகள் வெள்ளிக்கிழமை பெறப்பட்டு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

பி.சி.ஆர்.பரிசோனை செய்யும் திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையங்களில் கடமை புரிவோர், பஸ் சாரதிகள் நடாத்துனர்கள் மற்றும் மக்களுடன் வேலை செய்வோர் என பல தரப்பட்டோர்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and people standing

No comments:

Post a Comment