
எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி நிஹாரா மௌஜுத் நேற்று வெள்ளிக்கிழமை முதல் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலங்களில் உதவிப் பிரதேச செயலாளராகவும், கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலங்களில் பிரதேச செயலாளராகவும் 15 வருடத்திற்கு மேலாக கடமையாற்றியுள்ளார்.
இவர் தற்போது ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக நேற்று (21) முதல் கடமையை பொறுபபேற்றுள்ளார்.
No comments:
Post a Comment