
(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை பீகாஸ் கல்வி வளாகம் மற்றும் ஏ.ஜே.எம் பிரதர்ஸ் உடன் இணைந்து ஏற்பாடு செய்த “இரத்ததானம் செய்வோம் உயிர்களைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் கல்முனை பீகாஸ் வளாக கேட்போர் கூடத்தில் கடந்த வியாழன் (20 ) இடம்பெற்றது.
குறித்த இரத்ததான நிகழ்வானது பீகாஸ் (BCAS) கல்முனை வளாகத்தினால் கடந்த 2018 ம் ஆண்டு முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த இரத்ததான முகாம் மூன்றாவது வருடமாகவும் இவ் வருடமும் தொடர்ச்சியாக (2020) இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.டி.என். சிபாயா இரத்த முகாம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் மற்றும் இரத்ததானம் செய்த நலன் விரும்பிகளுக்கு தனது நன்றியை தெரிவித்ததுடன் கொவிட் -19 பரவல் காரணமாக அண்மைக்காலங்களில் மிகக்குறைந்தளவிலான இரத்ததான நிகழ்வுகளே இடம்பெற்றுள்ள சந்தர்ப்பத்தில் இது போன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக தனது நன்றியை தெரிவித்தார்.
மேலும் இதன் போது பீகாஸ் (BCAS) கல்முனை வளாக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் குருதி தானம் வழங்கி வைத்தனர் .
எதிர்வரும் காலங்களிலும் பீகாஸ் (BCAS) கல்முனை வளாகமானது இதுபோன்ற சமுக நலன் செயற்பாடுகள் ஊடாக பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களில் ஏனைய பொதுநிறுவனங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்வதற்கு உறுதுனையாக இருக்கும் என கல்முனை பீகாஸ் கல்வி நிலையத்தின் வளாக முகாமையாளர் பொறியியலாளார் என்.ரீ. ஹமீட் அலி தெரிவித்தார்.


No comments:
Post a Comment