
திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யட்டியன - மாத்தறை பிரதான வீதியில் இன்று (04) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து யட்டியன பிரதேசம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிய வேனும், எதிர்த்திசையில் பயணித்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிய தனியார் பஸ் வண்டியும், நேருக்குநேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விபத்தில் வேனில் பயணித்த ஆடைத் தொழிற்சாலை 05 பேரும், பஸ் வண்டியில் பயணித்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 02 பேரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வேனில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 35, 43 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில், வேன் மற்றும் பஸ் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சந்தேகநபர்களை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் திஹகொட பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment