ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு சிறப்பு விமான சேவை இடம்பெறவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 4, 2020

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு சிறப்பு விமான சேவை இடம்பெறவுள்ளது

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 335 ...
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு எதிர்வரும் 07ஆம் திகதி மற்றும் எதிர்வரும் 09ஆம் திகதிகளில் சிறப்பு விமான சேவை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவர் மல்ராஜ் டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கிடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. 

மேலும் இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் வெளிநாடுகளுக்கான விமான சேவை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டது. எனினும் அங்குள்ள ஆஸ்பத்திரி மற்றும் பொது இடங்களில் தனிமைப்படுத்தும் இடத்தை பொறுத்து பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 

கடந்த மே மாதத்தில் இருந்து இயக்கப்பட்ட 06 சிறப்பு விமானங்களில் சுமார் 1,800 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர். தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் 21 ஆயிரம் பேர் இலங்கைக்கு வருவதற்கு முன்பதிவு செய்துள்ளனர். தற்போது துபாயிலிருந்து இலங்கைக்கு விமான சேவை மீண்டும் இயக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் கர்ப்பிணிகள், மாணவர்கள், மருத்துவ அவசர தேவையுடையோர், வயதானவர்கள், வேலையிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே நிலைமையை பொறுத்து பயணிகள் வருவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

கடந்த மார்ச் 01ஆம் திகதிக்கு பின்னர் விசா இரத்து செய்யப்பட்டவர்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு வருகின்றனர். யாராவது அபராத தொகை கட்டவேண்டிய கட்டாயம் இருந்தால் அவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் அந்த தொகையை இரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

விசாவை இரத்து செய்தவர்கள், விசா காலாவதியானவர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊருக்கு திரும்ப எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை அபராதம் இரத்து செய்யப்பட வேண்டுமென ஐக்கிய அரபு இராச்சிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment