வலம்புரி ஊடகவியலாளர் மீது தாக்குதல் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 23, 2020

வலம்புரி ஊடகவியலாளர் மீது தாக்குதல்

வலம்புரி ஊடகவியலாளர் மீது தாக்குதல்-Valampury Journalist Beaten by 2 Unidentified Persons
வலம்புரியின் அலுவலகச் செய்தியாளர் விஜயநாதன் ஜனார்த்தன், இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (21) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், பிறவுண் வீதி, இரண்டாம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.

பணி முடிந்து வலம்புரி அலுவலகத்தில் இருந்து, மோட்டார் சைக்கிளில் தனது சொந்த இடமான ஊரெழுவுக்குப் புறப்பட்ட 20 வயதான ஜனார்த்தன், யாழ்ப்பாணம் பிறவுண் வீதி, இரண்டாம் ஒழுங்கையால், மோட்டார் சைக்கிளில் முகத்தைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு வந்த இருவரால் வழிமறித்து கம்பிகளால் தாக்கியுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

சம்பவத்தை அறிந்து அயல் வீடுகளில் இருந்தவர்கள் திரண்டபோது, தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளனர்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad