இரண்டு நாள் செயலமர்வுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு! - News View

Breaking

Post Top Ad

Sunday, August 23, 2020

இரண்டு நாள் செயலமர்வுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு!

No Confidence Motion on Secretary General of Parliament - OMLANKA
(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு 25,26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.

நாளைமறுதினம் 25ஆம் திகதி மற்றும் 26ஆம் திகதி என இரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு, பாராளுமன்றக் குழு அறை 1 இல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளது. அதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான அடிப்படை புரிதலை பெற்றுக் கொடுப்பதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த செயலர்வுக்கு பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் கலந்துகொள்வதுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

எனவே இந்த செயலமர்வில் தவறாது கலந்துகாெள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் செயலாளர் நாயகம் கேட்டுக் கொள்கின்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad