எறாவூர் நகருக்கு நிரந்தர பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

எறாவூர் நகருக்கு நிரந்தர பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு

TamilMirror.lk
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எறாவூர் நகர செயலகத்திற்கு நிர்ந்தர பிரதேச செயலாளராக நிஹாறா மௌஜுத் நியமிக்கப்பட்டதை தமது அமைப்பு பெரிதும் வரவேற்பதாக வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான மனிதாபிமான சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் சார்பில் அதன் பணிப்பாளர் கே. அப்துல் வாஜித் தனது வரவேற்பு அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, உங்களது பரந்த நிருவாக அனுபவமும் அறிவும் ஏறாவூர் நகர பிரதேச செயலப் பிரிவை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்வதற்கு உதவும் என எமது அமைப்பு திடமாக நம்புகின்றது.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் நீங்கள் வகிக்கும் பதவிக் காலத்தில் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு எமது அமைப்பு சமூகம்சார் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad