கொரோனா தொற்றால் காங்கிரஸ் எம்.பி. மரணம்! - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

கொரோனா தொற்றால் காங்கிரஸ் எம்.பி. மரணம்!

கொரோனா: 19 நாள்கள் சிகிச்சை! - கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் காலமானார்|  Congress MP H Vasanthakumar passed away
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்தார். கடந்த 10ம் திகதி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வசந்தகுமாா் எம்.பி. இறக்கும்போது அவருக்கு வயது 70. இவரது நோ்முக உதவியாளா் போத்திராஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வசந்தகுமாா் எம்.பி., அவரது மனைவி தமிழ்ச் செல்வி (61) ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், அவா்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது 10ம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இருவரும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். 

வசந்தகுமாரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை 7.00 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment