அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 12, 2020

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் - நாமல் ராஜபக்ஷ

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சு பதவி பெற்றமை தொடர்பாக ருவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன்.

என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதுடன், எனது நாட்டுக்கு என்னால் முடிந்த சேவை செய்ய எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2020 பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட நாமல், 166,660 வாக்குகளை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment