அநுராதபுரத்தில் சஹீட் சேருக்கான வெற்றி வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, August 3, 2020

அநுராதபுரத்தில் சஹீட் சேருக்கான வெற்றி வாய்ப்பு

Image may contain: 7 people, text
நாச்சியாதீவு பர்வீன்

அநுராதபுர மாவட்டத்தில் சுமார் 65,000 பதியப்பட்ட முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன. இவற்றில் 65 %-70% விகிதமான முஸ்லிம் வாக்குகள் இம்முறை அளிக்கப்படும் என்றால் சுமார் 40,000 - 45,000 வாக்குகள் அண்ணளவாக அளிக்கப்படலாம். எனவே சுமார் 40,000 வாக்குகள் அளிக்கப்படும் வாக்குகளாக கருதமுடியும். இவற்றில் மொட்டு அணியினர் சுமார் 12,000 க்கு அதிகமான முஸ்லிம் வாக்குகளை பிரித்தெடுப்பது உறுதியான விடயம். எஞ்சிய 28,000 வாக்குகளில் ஐக்கியதேசியக்கட்சியின் யானை சின்ன முஸ்லிம் வேட்பாளர்கள் இருவர், ஜே.வி.பி மற்றும் செல்படியற்ற வாக்குகள் என ஆகக்குறைந்தது சுமார் 8,000 வாக்குகள் பிரிந்து சென்றுவிடும். 

எஞ்சிய 20,000 முஸ்லிம் வாக்குகள்தான் அதிகபட்சமாக டெலிபோன் சின்னத்திற்க்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த 20,000 வாக்குகளில் சஹீத்சேருக்கு சுமார் 19,000 முஸ்லிம் வாக்குகளை பெறமுடியும். அவ்வாறே தொகுதி அமைப்பாளர் என்ற வகையிலும், சஜித்பிரேமதாசவின் நேரடி வேண்டுகோளுக்கு இணங்கவும் ஹொரவப்பொத்தானை தேர்தல் தொகுதியில் சுமார் 15,000 சிங்கள சகோதரர்களின் வாக்குகளை பெறக்கூடிய வாய்ப்பு சஹீட் சேருக்கு உள்ளது. அவ்வாறே அவர் ஒரு விஞ்ஞான பட்டதாரி, கல்வியியலாளர் ஏனைய சமூகத்தினராலும் அங்கீகரிக்கப்பட்ட, போற்றப்படுகின்ற சமூக, இன நல்லிணக்க ஆளுமை என்பதாலும், இவரிடம் கல்விகற்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,ஆசிரியர்கள் என்று பலமட்டங்களில் உள்ள கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட பலர் அநுராதபுர நிலப்பப்பரப்பெங்கும் பரவலாக வாழ்வதாலும் ஏனைய தொகுதிகளிலும் குறைந்தது தலா 2000 வாக்குகள் வீதம் (6×2000= 12,000). வாக்குகளை மிக இலகுவாக அவரினால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே 

மொத்த முஸ்லிம் வாக்குகள் - 19,000
ஹொ.தொகுதி.சி.வாக்குகள் - 12,000
ஏனைய 6 தொகுதி சி.வாக்கு -  12,00
                                                                    ------------
                                                                       43,000
                                                                     -----------
எனவே உத்தேசிக்கப்பட்டுள்ள 43,000 வாக்குகளை சஹீட் சேரினால்பெற முடியுமாக இருந்தால் இன்ஷா அல்லாஹ் கல்வி புலத்திலிருந்து ஒரு கம்பீரமான குரலினை பாராளுமன்றத்தில் அநுராதபுர சிறுபான்மை சமூகத்தின் வலுவான குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்ய முடியும்.

சஹீட் சேர் போன்ற கல்விமான் ஒருவரினால்தான் வரண்டு போயுள்ள அநுராதபுர முஸ்லிம் சமூகத்தின் கல்வியினை வளமாக்க முடியும், பட்டதாரிகளாக வரிசையில் நிற்கும் எமது மாவட்ட பட்டதாரிகளுக்கு ஒரு கௌரவமான அரச தொழிலினை பெற்றுக்கொடுக்க முடியும், சிறப்பான மொழியாற்றலினால் நமது பிரச்சினைகளுக்காக கௌரவமாக குரல் கொடுக்க முடியும். எனவே சஹீட் சேர் போன்ற அறிவும், ஆற்றலும்,ஆளுமையும் கொண்ட ஒருவருக்கு நமது மூன்று வாக்குகளில் முதலாவது வாக்கினை இடுவோம். 

இந்தத்தேர்தலில் அதிகமான அதிபர்கள்,ஆசிரியர்கள், அரச தொழில் புரிகின்றவர்கள், புத்தி ஜீவிகள், சமூக சேவையாளர்கள் என பலதரப்பட்டவர்களும் அறிவுப் புலத்திலிருந்து ஒரு அங்கீரம் பெற்ற அரசியல்வாதியை பெற்றுக்கொள்ளும் வியூகத்துடன் செயற்படுகின்றனர். எல்லாம் இறைவன் அவனே வெற்றியையும், தோல்வியையும் தீர்மானிக்கும் மகாசக்தி. இன்ஷா அல்லாஹ் சஹீட் சேரின் வெற்றிக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இறைவனிடம் கையேந்துவோம்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...

உங்கள் மூன்று வாக்குகளையும் கட்டாயமாக பயன்படுத்துங்கள், முதவாக்கை சஹீத் சேருக்கு வழங்குங்கள்.

தனி மனாப்ப கேட்டு வருகின்ற யாராக இருந்தாலும் அவ்வாறான சுயநலவாதிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.

No comments:

Post a Comment