தலதா, பூஜித் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வெளியேறினர் - News View

Breaking

Post Top Ad

Monday, August 24, 2020

தலதா, பூஜித் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வெளியேறினர்

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரளவும் இன்று (24) முற்பகல் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த சாட்சியமளிப்பு தொடர்பில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பிரதி தங்களுக்கு கிடைக்கவில்லை என சட்டத்தரணி ஊடாக தெரிவித்தமைக்கு அமைய குறித்த தினத்தில் மீண்டும் முன்னிலையாவதாக தெரிவித்து, அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவ்வினால் குறித்த ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாடு தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad