ரணில், அகில ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை பிரிவில் முன்னிலையாகினர் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

ரணில், அகில ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை பிரிவில் முன்னிலையாகினர்

ரணில், அகில ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை பிரிவில்-Ranil Wickremesinghe-Akila Viraj at Police Unit of the PCoI of the Easter Sunday Attack
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, அவ்வாணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அகில விராஜ் காரியவசமும் குறித்த பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னதாக அகிலா விராஜ் கரியவாசம் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணையத்தின் காவல் பிரிவுக்கு வந்து சாட்சியங்களை வழங்கியிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை (27) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அவரது கொழும்பிலுள்ள இல்லத்தில் வைத்து, அவ்வாணைக்குழுவின் பொலிஸார் சுமார் 10 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின்  முன்னாள் எம்.பிக்களான சாகல ரத்நாயக்க, ருவன் விஜேவர்தனவிடமும் இது தொடர்பில் அண்மையில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment