கிழக்கில் 58.9 வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது 38.06 வீதமாக இருக்கின்றோம் - அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

கிழக்கில் 58.9 வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது 38.06 வீதமாக இருக்கின்றோம் - அமைச்சர் வியாழேந்திரன்

உரிமையோடு சேர்ந்த அபிவிருத்தியுடன் கிழக்கை கட்டியெழுப்ப வேண்டும்-  வியாழேந்திரன் | Athavan News
உரிமையோடு சேர்ந்த அபிவிருத்தியுடன் கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழர்களை பொறுத்தவரையில் தற்போது நில, இன மற்றும் இன்னோரன்ன வளர்ச்சி ஒரு அசம்ந்தப் போக்கில்தான் செல்கிறது எனவும் இந்த பிரதிகூலமான நிலமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, துறைநீலாவணையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில், “எமது தமிழ் சமூகம் பிறருடைய கடைகளில் வேலை செய்கின்றார்கள். ஆனால் தமிழர்களுடைய கடைகளில் ஏனைய சமூகத்தவர்கள் வேலை செய்வதை கிழக்கு மாகாணத்தில் காணமுடியாது. இதற்கு தமிழர்களுடைய அரசியல் போக்குத்தான் காரணமாகும்.

வியாழேந்திரன் கட்சி மாறிவிட்டார், அவர் காணாமல் போய்விடுவார் என மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் நான் யாரையும் விமர்சித்து அரசியல் பயணத்தை தொடர விரும்பவில்லை. ஒரு காத்திரமான அரசியலை நாம் கட்டமைக்க வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் உரிமையோடு சார்ந்த அபிவிருத்தியின்பால் இந்த மாகாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். கிழக்கில் 58.9 வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது 38.06 வீதமாக இருக்கின்றோம்.

தற்போது, நில, இன, மற்றும் இன்னோரன்ன வளர்ச்சி என்பது ஒரு அசம்ந்தப் போக்கில்தான் தமிழர்களைப் பொறுத்த வரையில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த பிரதிகூலமான நிலமை மாற்றியமைக்கப்பட வேண்டும். 

பூசி மெழுகுகின்ற அரசியலை செய்துவிட்டுச் செல்ல முடியாது. உணர்வுபூர்வமான ஆரோக்கியமான அரசியலை கிழக்கில் கட்டியெழுப்ப வேண்டும். ஏனெனில் பல பிரச்சினைகளோடும் வேதனைகளோடும் வாழ்கின்றது தமிழ் சமூகம்.

இதேவேளை, சிறுபான்மை மக்களும் பாதிக்கப்படாத வகையிலே நலனோம்புத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். எமது அபிவிருத்தி, உரிமை சார்ந்த சாதகமான சமிக்ஞைகள் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

எனவே, முன்போக்குத் தமிழர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். மக்களின் பிரச்சனைகளை கட்டம்கட்டமாக நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment