வெற்றி பெறமுடியாத வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் வாக்களித்து தங்களின் பெறுமதியான வாக்குகளை வீணடிக்க வேண்டாம் - முன்னாள் எம்.பி. மன்சூர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

வெற்றி பெறமுடியாத வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் வாக்களித்து தங்களின் பெறுமதியான வாக்குகளை வீணடிக்க வேண்டாம் - முன்னாள் எம்.பி. மன்சூர் தெரிவிப்பு

முஸ்லிம்களின் இதயமாகக் கருதப்படும் அம்பாறை மாவட்டத்தை எதிர்வருகின்ற தேர்தலில் வெற்றி கொள்ள வேண்டும். தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். என ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்,ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (29) நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் எதிர்வருகின்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தவிர்ந்த தேசிய காங்கிரஸ் மற்றும் அகில அலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மை கட்சி சார்பாக களமிறங்கிருக்கின்ற எந்தவொரு கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறாமல் தோல்வி அடைவார்கள். இக்கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற எந்தவொரு வாக்கும் பிரயோசனம் அற்றது.

முஸ்லிம்களின் இதயமாகக் கருதப்படும் அம்பாறை மாவட்டத்தை எதிர்வருகின்ற தேர்தலில் வெற்றிகொள்ள வேண்டும். தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில் பொதுஜன பெரமுன மொட்டுக் கட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ள முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னம் வெற்றிபெற வேண்டும்.

அப்போதுதான் அம்பாறை மாவட்டத்தின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும். என்ற களநிலவரம் இருக்கின்றது. எமக்கு சவாலாக முஸ்லிம் சகோதர்கள் பலர் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் ஊடாக களமிறங்கியுள்ள நிலைமை ஓரளவு மக்களின் ஏகோபித்த தீர்மானத்திற்கு சவாலாக இருக்கின்றது.என்றால் அது மிகையாகாது.

முஸ்லிம் மக்களின் உரிமைக்குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான். கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது. இம்முறையும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றது. இச்சின்னத்திற்கு மாத்திரம் வாக்களித்தால் மட்டுமே அம்பாறை மாவட்டத்தை வெற்றி கொள்ள முடியும்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வெல்வதற்காக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய கட்சியினர் தோல்வி அல்லது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு வழி வகுப்பார்கள். என்ற யதார்த்த உண்மையினை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விகிதாசாரத் தேர்தல் முறையில் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஆகக்குறைந்தது 50 ஆயிரம் வாக்குகளை பெற வேண்டும். அவ்வாறு பெறாத எந்தக்கட்சியும் பாராளுமன்ற உறுப்பினரைப் பெறமுடியாது. இதற்கு உதாரணம் கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33 ஆயிரம் வாக்குகளை பெற்றும் ஒரு பிரதிநிதியினை பெற முடியவில்லை. அது குப்பைக்கூடைக்குள் கொட்டியது போல் ஆனது. வெற்றி பெறமுடியாத வேட்பாளருக்கும், கட்சிகளுக்கு வாக்களித்து தங்களின் பெறுமதியான வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.

எனவே எதிர்வருகின்ற காலம் சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் என்ன நடக்கும் என்று தெரியாமல் உள்ளது. எதிர்கால சந்ததியின் எதிர்காலம் பயங்கரமாக இருக்கும். ஏனெனில் ஓரே நாடு ஓரே சட்டம் என்ற கோசத்தோடு சட்டங்களை மாற்றிக் கொண்டு இருக்க வேண்டும். என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கம் இவ்வாறான சட்டதிட்டங்களை மாற்றியமைக்க கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை சிலவேளை இவ்வரசாங்கத்திற்கு கிடைக்குமாக இருந்தால் அதன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவத்தை வைத்து எமக்கான எந்தவொரு அரசியலும் அணுமுறையும் ஒருபோதும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற ஒரு பாரிய ஆபத்து இருக்கின்றது. இந்தத் தேர்தலை மிகவும் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

No comments:

Post a Comment