நிந்தவூர் கடலில் கரை வலையில் சிக்கிய இராட்சத சுறா - News View

About Us

About Us

Breaking

Monday, July 6, 2020

நிந்தவூர் கடலில் கரை வலையில் சிக்கிய இராட்சத சுறா

நிந்தவூர் நான்காம் பிரிவுக்குட்பட்ட பிரதேச கடலில் இன்று காலை (06) கரைவலை சிக்கிய இராட்சத சுறா இன மீன் பிடிபட்டதையடுத்து, இம்மீன் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

இம்மீன் சுமார் 15 அடி, நீளமும், 2 தொன், எடையும் கொண்டதாக இருக்கலாம் என, கரைவலை மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இம்மீன் "கொடுப்புளி சுறா" இன மீன் என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரை வலையை இழுத்து கரைக்கு கிட்டத்தட்ட வரும் முன்பேதான் இம்மீனைக் மீனவர்கள் கண்டதாகவும் வலையில் சிக்கியதால் மீனவர்களால் இழுக்க முடியாமல் உழவு இயந்திரத்தின் உதவியைக் கொண்டு கட்டி இழுத்த போது மீன்பிடி பரிசோதகர்கள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து அம்மீனை வலையில் இருந்து விடுவித்து மீண்டு கடலில் விடுமாறு உத்தரவிட்டனர்.

இதேவேளை கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் இராட்சத மீன்கள் வலையில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(நிந்தவூர் நிருபர் - சுலைமான் ராபி)

No comments:

Post a Comment