பொதுத் தேர்தலை நடத்துவதற்குரிய சுகாதார ஆலோசனைகளுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கோவையொன்று, சட்டமா அதிபரின் அனுமதிக்காக சுகாதார அமைச்சு அனுப்பி வைத்திருந்தது.
குறித்த வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக, அவரது இணைப்புச் செயலாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வர்த்தமானி கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்த நிலையில், அது பின்னர் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு இணங்க பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அனில் ஜாசிங்க அறிவித்திருந்தார்.
No comments:
Post a Comment