மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் கூடிய ஒதுக்கீடுகள் - கமநல அபிவிருத்தி திணைக்கள ஆனையாளர் நாயகம் டபிள்யு. எம். எம். பி. வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் கூடிய ஒதுக்கீடுகள் - கமநல அபிவிருத்தி திணைக்கள ஆனையாளர் நாயகம் டபிள்யு. எம். எம். பி. வீரசேகர

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்திக்கென கூடிய ஒதுக்கீடுகளை கமநல அபிவிருத்தித் திணைக்களம் வழங்கவுள்ளதாக அதன் ஆனையாளர் நாயகம் டபிள்யு. எம். எம். பி. வீரசேகர தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்ட நெல் அறுவடை சம்பிரதாயபூர்வ விழா கிரான் பூலாக்காடு முள்ளிப்பொத்தானைக் கண்டத்தில் கிரான் கமநலச் சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா, கமநல அபிவிருத்தி திணைக்கள ஆனையாளர் நாயகம் டபிள்யு. எம். எம். பி. வீரசேகர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சமய அனுஸ்டானங்களுடனும் பாரம்பரிய முறைகளுடனும் நெல் அறுவடையினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்த வைத்தனர்.

இங்கு பணிப்பாளர் நாயகம் வீரசேகர விவசாயிகள் அதிகாரிகள் மத்தியில் தொடர்ந்து உழைரயாற்றுகையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயத்துறையினூடாக மட்டக்களப்பு விவசாயிகள் பெரும் பங்காற்றிவருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் பொருட்டு மட்டக்களப்பு விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நீர்ப்பாசன அணைக்கட்டு பிரச்சினைகள் அனைத்தும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும்” என்றார்.

இந் நிகழ்வில் வறுமைக்குட்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளும் அவர்தம் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment