விவசாயிகளுக்கு முறையாக உரம் விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் - அமைச்சர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

விவசாயிகளுக்கு முறையாக உரம் விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் - அமைச்சர் பந்துல குணவர்தன

நெல் தவிர்ந்த ஏனைய பயிர் உற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு முறையாக விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை வகுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நெல் தவிர்ந்த ஏனைய பயிர் உற்பத்திக்கு தேவையான இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு தாமதமின்றி முறையாக விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக உயர்கல்வி, தொழில்நுட்பம்,புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

88 ஆயிரம் ஹெக்டர் காணியில் அடையாளங் காணப்பட்ட துறைகளில் 16 பயிர்களை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப் படுத்தப்படுவதாகவும், இந்த நிலைமையின் கீழ் நெல் அல்லாத ஏனைய பயிர்களுக்குத் தேவையான இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு முறையாகவும் தட்டுப்பாடின்றியும் வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் ஒன்றைவகுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

இதற்கமைவாக, மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ பின்வரும் ஏற்பாடுகளைக் கொண்ட வேலைத்திட்டத்தை அண்மையில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார். அது தொடர்பில் அமைச்சரவை விசேட கவனம் செலுத்தியிருப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

'சௌபாக்யே கெவத்த' போன்ற சிறிய அளவிலான விவசாய உற்பத்திக்காக முடிந்த வரையில் சேதன பசளை பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் தேவைப்படுமாயின் மாத்திரம் 10 கிலோ கிராமிற்கு குறைந்தளவில் இரசாயன உரத்தை கொள்வனவு செய்வதற்கு வசதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நெல் அல்லாத ஏனைய பயிருக்காக அங்கீகரிக்கப்பட்ட நிவாரண உர பங்கீட்டின் 50 வீதத்தை பகிரங்க சந்தையிலும் எஞ்சிய 50 வீதத்தை விவசாயஅபிவிருத்தி மத்திய நிலையங்கங்கள் ஊடாகவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அரசாங்க திணைக்களங்களின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மரக்கறி, பழ வகை போன்ற உற்பத்திகளுக்கு தேவையான இரசாயன உரத்தை விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்கள் ஊடாகவழங்குதல். இந்தமத்திய நிலையங்கள் மூலம் கொள்வனவுசெய்வதற்கு வசதிகள் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களில் தேவையான உரம் கையிருப்பில் இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது தாமதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விவசாய ஆய்வு மற்றும் உற்பத்தி உதவியாளரினால் வெளியிடப்படும் பற்றுச்சீட்டின் அடிப்படையிலான பகிரங்க சந்தையில் விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நடைமுறை யொன்றை வகுக்கவும் உள்ளதாக அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment