சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைப்பதாக அரசாங்கம் தெரிவிப்பது ஆபத்தானது - சீ.வை.பி. ராம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைப்பதாக அரசாங்கம் தெரிவிப்பது ஆபத்தானது - சீ.வை.பி. ராம்

யாழ். குடாநாட்டின் பாதுகாப்புமீது ...
(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைப்பதாக அரசாங்கம் தெரிவிப்பது ஆபத்தானது. அந்த நிலை ஏற்பட்டால் நாட்டில் சிறுபான்மை மக்களின் நிலைமை மோசமானதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளர் சீ.வை.பி. ராம் தெரிவித்தார்.

மத்திய கொழும்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் நாட்டின் ஜனாதிபதியை தெரிவுசெய்ததுபோல், எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் ஆட்சியமைப்பதாக மொட்டு கட்சி வேட்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களின் இந்த கூற்று ஆபத்தானது. எதிர்காலத்தில் அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாட்டில் சிறுபான்மை மக்களாக இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் நிலைமை மோசமாக அமையும் அச்சம் இருக்கின்றது.

அத்துடன் மக்கள் இன்று பாரிய பொருளாதார கஷ்டத்துக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர். தொழில் வாய்ப்புக்கள் இல்லை. சுயதொழில் புரிந்துவரும் அதிகமானவர்கள் தொழில் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் இவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கின்றது. அரசாங்கம் எந்த திட்டமும் இல்லாமலே செயற்படுகின்றது.

மேலும் கொழும்பில் சொந்த வீடுகளில் வாழ்ந்துவந்த அதிகமானவர்களின் வீடுகள் உடைக்கப்பட்டதற்கு பதில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளபோதும், சில வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்து வந்தன. அவர்களுக்கும் ஒரு வீடு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது. அதனால் மாடி வீடுகளில் அந்த குடும்பங்கள் மிகவும் சிறமத்துடனே வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான குடும்பங்களுக்கு தனி வீடுகளை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று அதிகமானவர்களுக்கு தற்காலிக காணி உறுதியே வழங்கப்பட்டிருக்கின்றது. அதனால் அவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும்போது அந்த மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். சஜித் பிரேமதாசவின் தலைமையில் அமையும் அரசாங்கத்தில் அவர்களுக்கு இஸ்தீரமான காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுப்போம். அத்துடன் கொழும்பில் தொடர்மாடிகளில் வசித்துவருபவர்க

ள் நகர அபிவிருத்தி சபைக்கு மாதம் 8ஆயிரம் ரூபாவரை செலுத்த வேண்டி இருக்கின்றது. இந்த தொகையை குறைப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment